Thursday, November 12, 2009

padithadhu rasithadhu

புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. Retire ஆனவுடன் கிழித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படித்தான் கழிக்கிறேன் என் பொழுதுகளை!
"உண்டதே உண்டு ,உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து உரைத்ததே உரைத்து ,
கண்டதே கண்டு, கழிந்தன கடவுள் நாட்கள்." - சுட்டது "கற்றதும் பெற்றதும்" By சுஜாதா

Tailpiece- ஆனந்த விகடனில் துணுக்கைக் கூட படிக்க பொறுமை அற்ற நான் அதிசெயமாக
நாஞ்சில் நாடனின் "தீதும் நன்றும்" தொடர்ந்து படிக்க வைத்து விட்டது

Punar Milaama

Wednesday, November 11, 2009

இரண்டு நாட்களுக்கு முன்னால் தினமணியில் ஒரு கவிதை (கவிதை கவிதை ) படித்தேன்.
என்னுடன் நீங்களும் ரசிக்கலாமே!
 "ஆசைக்கொரு கருப்பு மயிரேனும் இலையே
ஐயகோ கொக்குப் போல் நரைத்தது தலையே
காசுக்குதவா கிழமென்பது நிலையே
"கன்னியர்க்கும் இனி நாம் வேப்பிலையே"

 இதை எழுதியவர் யாரென்று தெரியுமா? ஆசுகவி வேதநாயகம் பிள்ளை அவர்களே. இக்கவிதை என் தலையைப் பார்த்து எழுதியது போல் உள்ளதே!  இக்கட்டுரையை எழுதிய திரு பி.வி.கிரி அவர்களும் இன்று இல்லை என்பது ஓர் வருத்தமான செய்தி