என் நண்பனுக்கு திடீரென two wheeler licence எடுக்கவேண்டுமென்ற விபரீத ஆசை வந்து விட்டது. ஒரு ஆளைப் பிடித்து இதற்கு ஏற்பாடு செய்தான். ஒரு நல்ல நாளில் அந்த ஆளும் வந்து, "சார், வாங்க, இன்னிக்கு போய் எடுத்துவிடலாம். சரியா 9 மணிக்கு RTO office வந்துடுங்க" என்று சுப வார்த்தைகளாகக் கூறி உசுப்பிவிட்டு விட்டான். இவனும் 8.30 மணிக்கே சென்று விட்டான். இப்பொழுது என் நண்பனைப் பற்றி சிறு அறிமுகம். "என் நண்பன் என்றால் எவ்வளவு வயதிருக்கும் என்று ஊகித்து கொள்ளுங்கள். ஏதோ சிறு வயதில் yezdi போன்ற வாகனங்களை ஒட்டியதாக ஞாபகம். எங்களைப் போலவே அந்த licenceம் காலாவதியாகிவிட்டது. மிகுந்த விடா முயற்சி உடையவன். நல்ல அறிவாளி." இப்போதைக்கு இது போதும் ஜம்மென்று அய்யா கையை வீசிக் கொண்டு சென்றார். ஒரே கூட்டம். ஒரு ஆள் காக்கி சீருடையில் வந்து, " licenceக்கு விண்ணப்பம் போட்டிருப்பவர்கள் எல்லாம் groundக்கு வந்து விடுங்கள் " என்று சொல்லிவிட்டு அங்கே சென்று விட்டார். நண்பனும் அங்கே சென்றான். ஒவ்வொருவராக கூப்பிட்டு, ஒரு இடத்தில நண்பன் பெயரை கூப்பிட, இவனும் சடாரென்று அவர் முன் நின்றான். "சரி, வண்டியில் 8 போட்டுக் காட்டுங்கள்" என்று கூற, இதை என் நண்பன் எதிர்பார்க்கவில்லை . ஏனெனில், இங்கு பல்வேறு இடர்பாடுகள் அவனை எதிர்கொண்டன. முதலில் அவனிடம் வண்டி எதுவும் கிடையாது. ரெண்டாவது, அவன் two wheeler ஒட்டியே 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நண்பன், innocent ஆகா மூஞ்சியை வைத்துகொண்டு, "வண்டி வந்திட்டிருக்கு சார், " என்றான். "அப்படின்னா அங்கே மரத்தடியில் உட்காருங்க, வண்டி கூட எடுத்துட்டு வராம, எங்க கழுத்த ஏன் அறுக்கிறீங்க " என்று அன்புடன் கடிந்து கொள்ள, நண்பனின் மனம் அப்போதே சுக்கு நூறாக உடைந்து விட்டது." நான் யார், என் யோக்யதை என்ன? இப்படி இவன் கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே " என்று தன்னை நொந்து கொண்டு தன்னிடம் ஆசை வார்த்தை கூறி கூட்டிக்கொண்டு வந்தவரைத் தேடினான். அந்த ஆளும் இவன் மேல் அனுதாபம் கொண்டு, எங்கிருந்தோ ஒரு scooti pep யை கொண்டு வந்து கொடுத்தார். அதை start செய்ய முயற்சி செய்ய, முதலில் எதை அமுத்தினால் start ஆகுமென்று உறுதி செய்ய முடியவில்லை. கஷ்டப்பட்டு பட்டனை தட்டினால் புஸ் புஸ் என்று சத்தம் தான் வந்ததே ஒழிய, வண்டி start ஆகிற வழியை காணவில்லை. எப்படியோ start செய்து acceleratorஐ திருக, வாண்டு மாமாவின் கதைகளில் வரும் பஞ்ச கல்யாணிக் குதிரை போல முன்னங்கால்களை தூக்கிக்கொண்டது. அரண்டு போய், அதனிடம் கெஞ்சி கூத்தாட,ஒரு வழியாக ஓட ஆரம்பித்தது. அந்த சமயம் அருகில் வந்த driving inspector, கொஞ்சம் ஆதரவாக," பரவாயில்ல சார், 8 மட்டும் போட்டு காட்டுங்க " என்று கேட்க, அப்பொழுதான் அவனுடைய வாழ்க்கையில் விதி வந்து விளையாடியது. வண்டியை control பண்ணுவதே பெரிய காரியம், இதில் 8,10 எல்லாம் எங்க போடுவது? என்ன தான் முயற்சி செய்தாலும் ஜிலேபி மாதிரி தான் சுற்றுகிறதே தவிர, 8 ஆவது, 4 ஆவது? கீழே விழாமல் மெல்ல வண்டியை நிறுத்தி அசடு வழிய, driving inspectorக்கு கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டு வந்தது." ரொம்ப பெரியவரா இருக்கீங்க. உங்கள திட்ட கூட முடியல. இதுல முடியாட்டி பரவாயில்ல, at least tvs 50 ஆவது ஒட்டி காட்டுங்க" என்றார். ஒரு tvs 50 யும் வந்தது. பிரச்சினை மறுபடியும் ஆரம்பித்தது. பெடலை என்ன சுத்தினாலும், எப்படி சுத்தினாலும் start ஆனாத்தானே! கை காலெல்லாம் வலி ஏற்பட்டது தான் மிச்சம். நண்பன் சோர்நது போய் உட்கார, அதற்குள் ground காலி ஆகிவிட்டது.
பொழுது மெல்ல போய்கொண்டிருந்தது. இன்னிக்கு அவ்வளவு தான் என்று உட்கார்ந்திருந்த சமயத்தில், இவனுடைய ஆள் வந்து, "என்ன சார், இப்படி சொதப்பிட்டீங்க. உள்ளே அய்யா கூப்பிடறாரு, வாங்க", என்று கூறி கூட்டி கொண்டு போனார். உள்ளே சென்றதும் அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இவனை video எடுத்தார்கள். licence ம sanction ஆகி விட்டது. எல்லாம் முடிந்து, officer இவனை மட்டும் உள்ளே கூப்பிட்டார். "உங்களுக்கு licence கொடுத்ததே, உங்களால் கண்டிப்பாக எந்த வண்டியும் ஓட்ட முடியாது என்ற தைரியத்தில் தான். தயவு செய்து licence இருக்கு என்ற தைரியத்தில், விஷப் பரீட்சை எதுவும் செஞ்சுடாதீங்க" என்றாரே பார்க்கலாம்!